Friday 23 September 2016

உன் கண்ணில் நீர் வழிந்தால்

படம் :வியட்நாம் வீடு
இசை :M.S.விஸ்வநாதன்
பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடிப்பை
அதில் என் இன்னல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன i பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும் 

2 comments:

  1. ஆலம்விழுதுகள் போல் உறவில்ஆயிரம்இருந்துமென்ன

    ReplyDelete
  2. இருந்துமென்ன -------> வந்தும் என்ன This is correct. The vizhuthugaL come much later than the tap root. Without the support of the tap root the tree will perish.

    ReplyDelete