Friday 23 September 2016

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு....

திரைப்படம்:ரிக்க்ஷாக்காரன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்:வாலி
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்



அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது


வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
(அங்கே சிரிப்பவர்கள் )


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
(அங்கே சிரிப்பவர்கள் )


தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
(அங்கே சிரிப்பவர்கள் ) 

No comments:

Post a Comment